பொது மக்களுக்கு சேவை செய்வதே அரச உத்தியோகத்தர்களின் பொறுப்பாகும்

0
238

அரசாங்க அதிகாரிகளின் முதலாளிமார் பொதுமக்கள் ஆகும் அவர்களுக்கு சேவை செய்வதே அரச உத்தியோகத்தர்களின் பொறுப்பாகும் என்று கோறளைப்பற்று பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் தெரிவித்தார்.

ஆரயம்பதி பிரதேச செயலகத்தில் இருந்து கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்று வருகை தந்த பிரதேச செயலாளர் தனது கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் பிரதேச செயலக உத்தியோகத்தர்களிடம் உரையாற்றும் போதே அவர் மேற்கூறியவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

பொது மக்களுக்கு சேவை செய்வதற்காகவே நாம் அனைவரும் அரசாங்க அதிகாரிகள் என்ற பெயரில் நியமிக்கப்பட்டுள்ளோம். பொது மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் இருந்து ஊதியம் பெரும் நாம் அவர்களுக்குறிய சேவையை வழங்குவதில் தாமதம் காட்டக்கூடாது.

பொதுமக்களுக்கு எமது சேவையின் மூலம் கிடைக்கும் திருப்தியே நமது வேலையாக இருக்க வேண்டும்.

இலங்கையில் உள்ள மொத்த சனத்தொகையில் 19 பேருக்கு ஒருவர் என்றடிப்படையில் அரச உத்தியோகத்தர்கள் இருந்தும் பொது மக்களுக்கான சேவை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவேயுள்ளது.

நாம் அனைவரும் மக்களுக்கு சேவை வழங்குவதில் தாமதம் காட்டாது உடன் சேவை வழங்குபவர்களாக திகழ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

(வாழைச்சேனை நிருபர்)

LEAVE A REPLY