இங்கிலாந்தை 142 ரன்களில் சுருட்டியது ஆப்கானிஸ்தான்

0
90

டி20 உலக கிண்ணத்தின் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்று டெல்லியில் நடைப்பெற்று வருகிறது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க ஆட்டகாரர் ஜெஸன் ராய் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். மற்றொரு தொடக்க வீரரான ஜேம்ஸ் வின்ஸ் 22 ரன்கள் எடுத்து நபி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். மூன்றாவது வீரராக களமிறங்கிய இங்லாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் 12 ரன்கள் எடுத்திருந்த போது ரன் ஆவுட் செய்யப்பட்டார்.

இதன் பிறகு களமிறங்கிய மோர்கன்(0), ஸ்டோக்ஸ்(6), பட்லர்(7) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 85 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆனால் ஆல்ரவுண்டர் மொயின் அலியும், வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லேவும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். மொயின் அலி 41 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 142 ரன்கள் எடுத்துள்ளது. ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது நபி மற்றும் ரஷீத் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார்கள்.

143 ரன்கள் எடுத்து ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற வேண்டுமானால் தொடக்க ஆட்டகாரர் முகமது ஷெசாத் தனது வழக்கமான அதிரடியை காட்ட வேண்டியது அவசியம்.

LEAVE A REPLY