(Poem) ஸ்ட்ரீட் வியூ

0
190

மாப்புள பொண்ணும்
மேப்பில தேடலாம்

திருடி ஓடும் வழி
த்ரிடீயில் பார்க்கலாம்

எட்டிப் பார்த்தவர்
இப்ப உள்ளிருந்தே
தட்டிப் பார்க்கலாம்
பெட்டரி தீரும் வரை

பெஷனாய் உடுத்து
பில்டப் கொடுக்கும்
பசங்க சிலபேர்
பழைய சாரணும்
கசங்கிய பெனியனுமாய்
காட்சி தருகிறார்.

கொடியில உடுப்பு
அடியில வாளி
படியில செருப்பு
பக்கத்தில பம்பஸ்
முடியல சிலரின்
முன் வாசல் கோலம்

அடிக்கடி நடமாடும்
அகல வீதிகளை
சொடுக்கிப் பார்க்கிறார்
ஸூம் பண்ணிப் பார்க்கிறார்
கடுப்பாய் ஏசுறார்
காணல்ல தன் போட்டோவ.

ஆக்கள்ட போட்டோவ
அசிங்கமாய்ப் பிடித்து
கூக்கிள்ள போட்டதற்கு
கொதிக்கும் போராளி
கூவி விற்பவன் பார்க்கலாம்
கூகிளுக்கு ஹறாமோ?

உண்மையில் இந்த
உயர் தொழி நுட்பத்தில்
நன்மையே அதிகம்
நாம் அதை உணர்வோம்

-நிஷவ்ஸ் –

LEAVE A REPLY