ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகராக்க டிரம்ப் உறுதி

0
173

அமெரிக்க ஜனாதிபதியாகும் எதிர்பார்ப்பில் இருக்கும் குடியரசு கட்சியின் முன்னணி ஜனாதிபதி போட்டியாளர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் தலைநகராக ஜெரூசலத்தை அங்கீகரிப்பதாகவும் அமெரிக்க தூதரகத்தை ஜெரூசலத்திற்கு மாற்றுவதாகவும் உறுதி அளித்துள்ளார்.

இஸ்ரேல் தனது தலைநகராக ஜெரூசலத்தை அறிவித்தபோதும், அமெரிக்கா உட்பட பல நாடுகளும் அதனை நிராகரித்து வருகின்றன. இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன அமைதிப் பேச்சிலும் ஜெரூசலத்தின் எதிர்காலம் இழுபறியை ஏற்படுத்தும் விடயமாக உள்ளது.

இந்நிலையில் டிரம்ப் சி.என்.என். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “என்னை விடவும் இஸ்ரேல் ஆதரவுடையவர் எவரும் இல்லை. நாம் இஸ்ரேலை பாதுகாப்போம். இஸ்ரேல் எமக்கு மிக முக்கியமானது” என்றார்.

டிரம்ப் இஸ்ரேல் ஆதரவுக் குழுவை வொஷிங்டனில் சந்திக்கும் முன்னரே அவர் இந்த கருத்தை வெளியிட்டிருந்தார். ஏற்கனவே அவர் பல சர்ச்சைக்குரிய கருத்துகளையும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY