வஸீம் தாஜுதீனின் வழக்கு விசாரனைகளை துரிதப்படுத்துமாறு உத்தரவு

0
193

படுகொலை செய்யப்பட்ட றக்பி வீரர் வசிம் தாஜூடினின் கொலை தொடர்பிலான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு இன்றைய தினம் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.

இன்றைய தினம் இந்த வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேலதிக நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

வழக்கு தொடர்பான முழு அறிக்கையையும் விரைவில் நீதிமன்றிற்கு சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக இதன்போது குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY