பசியின்மை – காரணமும் தீர்வும்

0
166

ஆரோக்கியத்திற்கு அடையாளம் பசி. நீண்ட நாள் வாழவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் பசி எடுக்காமல் சாப்பிடவே கூடாது.

* பசி எடுக்காமல் இருப்பது
* அளவுக்கு அதிகமான பசி
* களிமண், அடுப்பு கரி, போன்றவற்றை சாப்பிட ஆசை வருவது

போன்ற காரணிகள் இந்த பசியின்மையை அடையாளம் காட்டுகிறது. இந்த பசியின்மையை ஏன் வருகிறது என்று பார்த்தல்

* உடல் நிலையில் ஏதாவது குறை இருப்பின்
* மலச்சிக்கல்
* உடல் உழைப்பின்மை
* அதிக அளவு புகை பழக்கம்.
* அளவிற்கு அதிகமான குடிப்பழக்கம்

இவை போன்ற பல காரணங்கள்.

சாப்பிடுவதற்கு முன் ஒரு நல்ல நடைபயிற்சி மேற்கொண்டுவிட்டு உணவு உண்ணும்பொழுது பசி நன்றாக எடுத்து உணவு சுவை கூடும்.

* ஒரு வேலை கோதுமை புல் சாறு குடித்தால் பசி அதிகமாகும்.

* தக்காளி சாரும் பசியை தூண்டும்.

* ஒரு எலுமிச்சையை நான்கு துண்டுகளாக வெட்டி பிரிக்காமல் சிறிது உப்பு, மிளகு தூள், சுக்கு தூள், சர்க்கரை போன்றவற்றை அதில் தூவி அப்படியே பாத்திரத்தில் மூடி ஒருநாள் இரவு முழுவதும் வைத்து காலையில் தோசை கல்லில் பழத்தை சிறிது அனலில் போட்டு வாட்டி எடுத்து அந்த எலுமிச்சை சாற்றை அப்படியே உறிந்து குடித்தால் பசி அதிகரிக்கும். இது கல்லீரலையும் நன்கு வேலை செய்ய வைக்கும்.

* வெறும் வயிற்றில் தேநீரை அருந்தவே கூடாது. இது பசியை மட்டுப்படுத்திவிடும்.

LEAVE A REPLY