வறுமையின் காரணமாக கல்வியினை இடை நிறுத்தக்கூடாது: ஷிப்லி பாறுக்

0
165

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் வேண்டுகோளுக்மைவாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழ் வறிய குடும்பத்தைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் முதற்கட்ட நிகழ்வானது 2016.03.21ஆந்திகதி திங்கட்கிழமை காத்தான்குடி கர்பலா அல்-மானார் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வுக்கு கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் இணைப்பாளர், பாடசாலை அதிபர், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர்
கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்,

இலங்கையிலுள்ள மாகாண சபைகளில் மூவின மக்களின் ஒற்றுமையை சிறந்த விதத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை என்றால் அது கிழக்கு மாகாண சபையாகும்.

அதே போன்று மக்கள் மனதிலும், கட்சிகளுக்கிடையிலும் ஒற்றுமை ஏற்பட்டுள்ளது. இப்போதுள்ள நல்லாட்சி அரசாங்கத்தில் கல்விக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அந்த வாய்ப்பை நாம் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும், வறுமையினால் கல்வி கிடைக்கவில்லை என்ற நிலை எந்த மாணவருக்கும் வரக்கூடாது. அவ்வாறு வறுமையின் காரணமாக கல்வி கிடைக்காமல் போயிருந்தால் நானும் ஓர் பொறியியலாளராக இன்று ஆகியிருக்க முடியாது என தனதுரையில் தெரிவித்தார்

(M.T. ஹைதர் அலி)

LEAVE A REPLY