அதிக விக்கெட்: அப்ரிடி சாதனை

0
317

இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் கேப்டனும், சுழற்பந்து வீச்சாளருமான அப்ரிடி 4 ஓவர்கள் பந்து வீசி 40 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் 20 ஓவர் உலக கிண்ணத்தில் அவரது விக்கெட் எண்ணிக்கை 39-ஆக (33 ஆட்டம்) உயர்ந்தது.

இதையடுத்து 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர் என்ற பெருமையை இலங்கையின் மலிங்காவிடம் இருந்து (38 விக்கெட், 31 ஆட்டம்) தட்டிப்பறித்தார். 36 வயதான அப்ரிடி ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட்டிலும் 97 விக்கெட்டுகளுடன் (97 ஆட்டம்) முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY