பிள்ளையானுக்கும் சகாக்களுக்கும் விளக்கமறியல் நீடிப்பு

0
94

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

Pillayan 2தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட அவரது சகாக்கள் நான்கு பேருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த நான்கு பேரையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராசா, புதன்கிழமை உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின்படி சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான ‘பிரதீப் மாஸ்டர்’ என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஷ்ணானந்தராஜா, ‘கஜன் மாமா’ எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவ புலனாய்வு உத்தியோகஸ்தர் எம். கலீல் ஆகியோருக்கே விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப்பேராலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த 11.10.2015 அன்று சிவநேசதுரை சந்திரகாந்தனைக் கைதுசெய்தமை குறிப்பிடத்தக்கது.

Pillayan 1

LEAVE A REPLY