இன்று உலக வானிலை தினம்

0
104

உலக வானிலை தினம் இன்றாகும்.

21 ஆம் நூற்றாண்டிலும் அதன் பிந்திய காலப்பகுதிகளிலும் பெரும் சவாலாக பதிவாகின்ற விடயம் காலநிலை.

ஐக்கிய நாடுகளின் அங்கமான வானிலை ஆராய்ச்சி நிறுவகத்தினால் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 23 ஆம் திகதி வானிலை தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

2015 ஆம் ஆண்டில் பெரிதும் பதிவாகிய வெப்ப நிலை தாக்கம் தொடர்பில் இந்த வருட வானிலை தினத்தில் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

வெப்ப அலை எனும் தொனிப் பொருளில் 2016 வானிலை தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

உலக வரலாற்றில் கடந்த வருடமே வெப்ப நிலை அதிகரித்த வருடமாக பதிவாகியது.

பச்சை வீட்டு வாயு மற்றும் அது தொடர்பான பிரச்சினைகளையும் வானிலை தினத்தில் கருத்தில் கொள்ளப்படுவதுடன் இந்த நாட்களில் வானிலை மற்றும் இயற்கை தொடர்பிலான அவதானம் அதிகளவில் செலுத்தப்படுகின்றது.

இதேவேளை பருவ பெயர்ச்சி மழை தாமதமாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இந்த மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத முற்பகுதியிலோ மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் கூறியுள்ளது.

LEAVE A REPLY