இஸ்லாத்தில் பயங்கரவாதம் மற்றும் வன்முறைக்கு இடமில்லை – ஷேக் ஹசீனா

0
108

இஸ்லாம் மார்க்கத்தில் பயங்கரவாதம் மற்றும் வன்முறைக்கு இடமில்லை என்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உறுதிபடத் தெரிவித்தார்.

பங்கபந்து சர்வதேச கருத்தரங்கு மையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

இஸ்லாம் மதத்தில் வன்முறை மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு ஒருபோதும் இடமில்லை. இது, மிகவும் அமைதியான, அன்பான மார்க்கம். இந்த மார்க்கதை அனைவரிடமும் பிரபலப்படுத்துவது, ஒவ்வொரு முஸ்ஸிம் மாணவரின் கடமையாகும்.

மாணவர்கள் அனைவரும், வன்முறை மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு அப்பாற்பட்டவர்களாக இருப்பதுடன் அத்தகைய போக்குகளுக்கு முடிவு கட்டவும் முன்வர வேண்டும் என்றார் அவர்.

LEAVE A REPLY