பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது நியூசிலாந்து

0
139

டி20 உலக கிண்ணத்தின் நேற்று மொகாலியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் விளையாடின.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. மார்டின் கப்திலும், கேப்டன் வில்லியம்ஸனும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள். கப்தில் அதிரடி காட்ட வில்லியம்ஸன் நிதானமாக விளையாடினார். கப்தில் அதிரடியால் நியூசிலாந்து 6 ஓவர் முடிவில் 58 ரன்கள் குவித்தது. வில்லியம்ஸன் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து களமிறங்கிய முன்றோ, ஆண்டர்ஸன், ரோன்ஞ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

முக்கிய கட்டத்தில் சமி, மார்ட்டின் கப்திலை 80 ரன்களில் ஆட்டமிழக்க செய்தார். இதனால் நியூசிலாந்தின் ரன் ரேட் சரிந்தது. அனுபவ வீரரான ராஸ் டெய்லர் இறுதியில் அதிரடி காட்ட நியூசிலாந்து 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 180 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் முகமது சமி 4 ஓவர்கள் வீசி 23 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

181 ரன்கள் எடுத்தால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற நெருக்கடியுடன் பாகிஸ்தான் களமிறங்கியது.

தொடக்க வீரர் ஷார்ஜில் கான் அதிரடியாக ஆடி 25 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து அந்த அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தார். ஆனால் மற்ற வீரர்களால் வேகமாக ரன் குவிக்க முடியவில்லை. அகமது ஷெதாத்(30), அக்மல்(24), மற்றும் அப்ரிடி (19) ஆகியோர் நல்ல தொடக்கத்தை கண்டாலும் பெரிய அளவில் ரன் அடித்து அணியை வெற்றி பெறவைக்க முடியவில்லை. 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் 5 விக்கெட்களை இழந்து 158 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் நியூசிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆட்டநாயகனாக மார்ட்டின் கப்தில் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

LEAVE A REPLY