உக்ரைன் பெண் விமானி சாவன்ஸ்கோவுக்கு 22 ஆண்டு சிறை: ரஷ்ய நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

0
189

பத்திரிக்கையாளர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் உக்ரைனை சேர்ந்த பெண் பைலட் சாவன்ஸ்கோவிற்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ரஷ்ய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உக்ரைனை சேர்ந்த பெண் விமானி நாடியா சாவன்ஸ்கோ (34 வயது) 2014ம் ஆண்டு கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு போராளிகளால் கடத்தப்பட்டு ரஷ்ய இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார். 2 ரஷ்ய தொலைக்காட்சி நிருபர்களை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு ரஷ்ய அதிகாரிகளால் சிறையில் அடைக்கப்பட்டார்.

தொலைக்காட்சி நிருபர்கள் கொலை செய்யப்படுவதற்கு முன்பாகவே தான் கடத்தப்பட்டதாக நாடியா கூறியுள்ளார், மேலும் இது அரசியல் காரணங்களுக்காக போடப்பட்ட பொய் வழக்கு என்று கூறியுள்ளார்.

நாடியா தற்பொழுது உக்ரைன் மக்களின் கதாநாயகியாக உள்ளார், உக்ரைனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐரோப்பிய யூனியன் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார்.

இரண்டு வருடங்களுக்கு மேலாக நாடியா மீதான வழக்கு நடைபெற்று வந்ததால், மிகவிரைவில் வழக்கை முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். தன்னுடைய கோரிக்கையை வலியுறுத்தி சிறையில் உண்ணாவிரதமும் இருந்து வந்தார்.

இந்நிலையில், உக்ரைன் பெண் விமானி சாவன்ஸ்கோவிற்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ரஷ்ய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

LEAVE A REPLY