தோலின் உயிரணுக்கள் மூலம் மூளைப்புற்று நோயை குணப்படுத்தலாம்

0
137

வடக்கு கரோலினா மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நோயாளியின் தோலில் இருக்கும் உயிரணுக்களை ‘பைப்ரோ பிளாஸ்ட்ஸ்’ எனப்படும் குருத்தணுக்களாக மாற்றி அதை வைத்தே கிலியோ பிளாஸ்டோமா மூளைப்புற்றுக் கட்டியை கொன்று, குணப்படுத்த முடியும் என ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த குருத்தணுக்கள் ஒருவித புரதத்தை வெளிப்படுத்தியவாறு மூளையின் வெளிப்புறம் மட்டுமின்றி ஆழ்ந்த பகுதிகளுக்கும் சென்று செயலாற்றுவதால் கிலியோ பிளாஸ்டோமாவை முழுமையாக கொல்வதுடன் மீண்டும் புற்று ஏற்படாதவாறு பாதுகாக்கின்றன என இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மனிதர்களின் தோலில் உள்ள கலம்களான உயிரணுக்களை ஸ்டெம் கலம் எனப்படும் குருத்தணுக்களாக மாற்றி சிகிச்சை அளிப்பதன் மூலம் கிலியோபிளாஸ்டோமா மூளைப்புற்றை பூரணமாக குணப்படுத்திவிட முடியும் என இந்த ஆய்வுக்குழுவின் தலைவரான ஷான் ஹிங்டன் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY