அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் க.பொ.த. சா/தரம் சித்தியடைந்த மாணவர்களின் விபரம்

0
560

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின், கோறளைப்பற்று மேற்கு கோட்டத்திற்குட்பட்ட பாடசாலையான மட்-மம-மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் 2015ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு ஏழுபத்தி ஏழு (77) மாணவர்கள் தோற்றி எழுபத்தி நான்கு (74) மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரத்திற்கு (96% சதவீதம்) சித்தியடைந்துள்ளனர்.

இப்பாடசாலையில் 5Aற்கு மேற்பட்ட சித்தி பெற்ற மாணவர்களின் விபரம்
1. கே.எம். பாத்திமா நுஹா – 9A
2. எஸ்.எம். முஹம்மட் முஸ்தாக் – 8A, B
3. எம்.எப்.எம். வாஸித் – 8A, B
4. எஸ்.எம். அஸாம் – 6A, 2B, C
5. எம்.ஏ.எப். தஸ்லியா – 6A, 2B, C
6. யு.எல்.எப். றிஸ்லா – 6A, B, 2 C
7. எம்.ஜே.எம். பர்ஸாத் – 5A, 4B
8. ஏ.எப். சலாமா றிஷா – 5A, 3B, C
9. எம்.ஐ.ஏ. ஹிராஸ் – 5A, 2B, 2C

இப்பரீட்சை பெருபேறுகள் தொடர்பாக பாடசாலை அதிபர் ஏ.எல். அபுல் ஹசன் அவர்களை தொடர்பு கொண்ட போது…

இப்பாடசாலையில் 97 சதவீத மாணவர்கள் சித்தியடைந்துள்ளதோடு, இப்பாடசாலைக்கு பெருமையினையும் தேடித்தந்துள்ளனர். அத்தோடு இவ்வாறானதொரு பெருபேற்றினை இம்மாணவர்கள் பெற்றுக்கொள்ள அதிகூடிய கரிசனையுடன் பல தியாகங்களுக்கு மத்தியில் இம்மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள், இக்கல்லூரியின் பிரதி அதிபர்கள், ஏனைய ஆசிரியர்கள், இப்பிள்ளைகளின் பெற்றோர்கள்,பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், இப்பாடசாலை மாணவர்களின் கல்வி விடயத்தில் கரிசனை காட்டும் சமூக அமைப்புக்கள் மற்றும் இப்பாடசாலையின் பழைய மாணவர்கள் ஆகியோருக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.

-M.T. ஹைதர் அலி-

LEAVE A REPLY