பாகிஸ்தானுக்கு 181 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது

0
37

டி20 உலக கிண்ணத்தின் இன்று மொகாலியில் நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. மார்டின் கப்திலும், கேப்டன் வில்லியம்ஸனும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள். கப்தில் அதிரடி காட்ட வில்லியம்ஸன் நிதானமாக விளையாடினார்.

கப்தில் அதிரடியால் நியூசிலாந்து 6 ஓவர் முடிவில் 58 ரன்கள் குவித்தது. வில்லியம்ஸன் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து களமிறங்கிய முன்றோ, ஆண்டர்ஸன், ரோன்ஞ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

முக்கிய கட்டத்தில் சமி, மார்ட்டின் கப்திலை 80 ரன்களில் ஆட்டமிழக்க செய்தார். இதனால் நியூசிலாந்தின் ரன் ரேட் சரிந்தது. அனுபவ வீரரான ராஸ் டெய்லர் இறுதியில் அதிரடி காட்ட நியூசிலாந்து 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 180 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் முகமது சமி 4 ஓவர்கள் வீசி 23 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

181 ரன்கள் எடுத்தால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற நெருக்கடியுடன் பாகிஸ்தான் களமிறங்கியுள்ளது.

LEAVE A REPLY