இது எங்கள் நாட்டிற்கு இருண்ட தருணம்: தீவிரவாத தாக்குதல் குறித்து பெல்ஜியம் பிரதமர் கருத்து

0
152

பெல்ஜியம் தலைநகர் புரூசெல்சில் உள்ள ஸவன்டெம் விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையத்தில் அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வெடித்த சம்பவத்தில் 28 பேர் உயிரிழந்தனர். முப்பதுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், பெல்ஜியம் நாட்டின் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பிரதமர் சார்லஸ் மிகைல் பேசினார்.

அப்போது சார்லஸ் கூறியதாவது:-

கண்மூடித்தனதான தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளோம். இது ஒரு இருண்ட தருணம். ஐரோப்பிய வரலாற்றில் உண்மையான அச்சுறுத்தலின் புதிய பக்கங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

எங்களுக்கு தெரியும் நிறைய பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். எங்கள் நாட்டிற்கு இது ஒரு இருண்ட தருணம். எங்களுக்கு அமைதியும், ஒற்றுமையுணர்வும் தேவை.

தீவிரவாத தாக்குதல் நடைபெறாமல் தடுப்பதற்கு ரகசிய உளவுத்துறை மிகப்பெரிய வேலை செய்தது. இருப்பினும் நாங்கள் பயந்தது நடந்துவிட்டது.

புரூசெல்ஸ் தாக்குதல் கண்டிக்கத்தக்கது. இது ஒரு கண்மூடித்தனமான, கோழைத்தனமாக தாக்குதல். எல்லைப் பகுதியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY