ரியோ ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வு பெறுகிறார் உசேன் போல்ட்

0
122

இந்த ஆண்டு ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியே தனது கடைசி போட்டி என்றும், அதன்பிறகு ஓய்வு பெறப்போவதாகவும் உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரரான உசேன் போல்ட் தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக்கில் 6 முறை தங்கம் வென்ற உசேன் போல்ட், தனது பயிற்சியாளர் கிளன் மில்ஸ் அறிவுரையின்படி 2020ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வு பெற உள்ளதாக முன்னர் அறிவித்திருந்ததார். ஆனால், இப்போது ரியோ ஒலிம்பிக்குடன் ஓய்வு பெற உள்ளதாக கூறியுள்ளார்.

29 வயதான உசேன் போல்ட் இதுபற்றி கூறுகையில், “ரியோ ஒலிம்பிக் போட்டிதான் நான் பங்கேற்கும் கடைசி ஒலிம்பிக் போட்டியாக இருக்கும். இன்னும் 4 ஆண்டுகளுக்கு விளையாடுவது கடினமான விஷயம். எனவே, ரியோ ஒலிம்பிக்குடன் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன்.

ஒலிம்பிக்கில் மீண்டும் மூன்று தங்கம் வெல்வதே எனது மிகப்பெரிய கனவு. அதில் கவனம் செலுத்துவேன். 200 மீட்டர் தூரத்தை 19 வினாடிகளுக்குள் கடக்க வேண்டும். அந்த குறிக்கோளுடன் விளையாடுவேன்” என்றார்.

LEAVE A REPLY