கிறிஸ் கெய்ல் இடத்தை என்னால் பிடிக்க முடியாது: பிளட்சர்

0
176

‘குரூப் 1’ பிரிவில் இடம் பெற்றுள்ள வெஸ்ட்இண்டீஸ் அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

அந்த அணி தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

11 பந்து எஞ்சி இருந்த நிலையில் 183 ரன் இலக்கை எளிதில் எடுத்தது. இதற்கு கிறிஸ் கெய்லின் அதிரடி ஆட்டமே காரணம். அவர் 48 பந்தில் 100 ரன் எடுத்தார்.

வெஸ்ட்இண்டீஸ் 2–வது ஆட்டத்தில் இலங்கையை 7 விக்கெட்டில் எளிதில் வென்றது. இந்த வெற்றிக்கு பிளட்சர் காரணமாக இருந்தார்.

தொடக்க வீரராக களம் இறங்கிய அவர் 64 பந்தில் 84 ரன் எடுத்தார். இதில் 6 பவுண்டரியும், 5 சிக்சர்களும் அடங்கும்.பீல்டிங்கின் போது அதிரடி வீரர் கிறிஸ்கெய்ல் காயம் அடைந்தார். இதனால் அவர் பேட்டிங் செய்யவில்லை.

கெய்ல் இடத்தில் தொடக்க வீரராக வந்து பிளட்சர் அதிரடியை வெளிப்படுத்தினர்.இந்த நிலையில் கிறிஸ் கெய்ல் இடத்தை என்னால் பிடிக்க இயலாது என்று பிளட்சர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:–இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க வீரராக களம் இறங்கி அதிரடியாக ஆடியது மகிழ்ச்சி.

கெய்லின் தொடக்க வீரர் இடத்தை நான் எடுக்கவில்லை. அவரது இடத்தை என்னால் பிடிக்க முடியாது. உலகின் எந்த ஒரு வீரரும் தொடக்க வீரர் இடத்தை பிடிக்க முடியாது. தொடக்க வீரர் வரிசையை எனக்கு கொடுத்த அணி நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

அடுத்து வரும் ஆட்டத்திலும் தொடக்க வீரர் வரிசை கிடைக்குமா? என்பதை என்னால் சொல்ல முடியாது.அடுத்து வரும் ஆட்டங்களிலும் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம். உலககோப்பையை கைப்பற்ற இயலும் என்ற நம்பிக்கையில் நாங்கள் இருக்கிறோம்.இவ்வாறு பிளட்சர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY