அமேரிக்காவில் குழந்தையை oven அடுப்பில் வைத்து எரித்த கொடூர தாய்

0
379

அமெரிக்காவில் oven அடுப்பில் வைத்து ஒரு கொடூரதாய் குழந்தையை எரித்தாள்.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கிளன் ரோஸ் பகுதியைச் சேர்ந்தவர் தாஷா ஷான்டெல் ஹெட்சர் (35).

இவருக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.சம்பவத்தன்று இவரது குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது.

அப்போது ஹெட்சர் அந்தக் குழந்தையை அழைத்து வீட்டில் இருந்த oven அடுப்பில் உயிருடன் வைத்து எரித்தாள்.

இதனால் வெப்பத்தின் வேதனை தாங்காமல் குழந்தை அழுது துடித்தது. அதை கேட்ட அக்கம் பக்கத் தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீ சார் அங்கு விரைந்து வந்து ‘oven’ அடுப்பில் இருந்த குழந்தையை மீட்டனர்.அடுப்பில் வைத்து எரித்ததால் குழந்தையின் உடல் எரிந்து கடுமையான தீக்காயம் இருந்தது.

அக்குழந்தைக்கு டெக்காஸ் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக விமானம் மூலம் டல்லாஸ் நகர ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டாள். அங்கு அக்குழந்தையின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதற்கிடையே குழந்தையை எரித்த கொடூர மனம் கொண்ட தாய் ஹெட்சர் கைது செய்யப்பட்டார். எதற்காக அவர் தனது குழந்தையை அடுப்பில் வைத்து எரித்தார் என தெரியவில்லை.

அமெரிக்காவில் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஒசியோ மாகாணத்தில் பிராங்களின் நகரைச் சேர்ந்த 4 வயது சிறுவன் ஆஸ்டினை அவனது மாற்றாந்தாய் கொதிக்கும் நீரில் நிற்க வைத்து கொன்றார்.

LEAVE A REPLY