கஞ்சாவுடன் வயோதிபர் கைது

0
130

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் பொலிஸ் பிரிவில் கஞ்சாவுடன் வயொதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்வதாக பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைக்கப் பெற்றதின் பேரில் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட திடீர்ச் சோதனையில் இந்தக் கைது இடம் பெற்றுள்ளது.

ஏறாவூர் மீராகேணி வீதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த 66 வயதான சந்தேக நபரிடமிருந்து 6600 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் அந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY