வீதியால் நடந்துசென்றோர் மீது லொரி மோதிய பரிதாபம்

0
177

புத்தளம் – அனுராதபுரம் பிரதான வீதியின் சாலியவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை 5.30 அளவில் மதவழிபாடுகளுக்காக வீதியில் பயணித்தகொண்டிருந்த மூவர் லொறியொன்றின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.

இரண்டு பெண்களும் 8 வயதான ஆண்பிள்ளையொன்றுமே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் பின்னர் லொறியுடன் சாரதியும் தலைமறைவாகியுள்ளதாகவும் இது தொடர்பில் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டினர்.

LEAVE A REPLY