அஸ்-ஸூஹதா வித்தியாலயத்திற்கு அப்துர் ரஹ்மான் விஜயம்

0
178

காத்தான்குடியின் ஆரம்பப் பாடசாலைகளில் ஒன்றான அஸ்-ஸூஹதா வித்தியாலயத்திற்கான விஜயம் ஒன்றினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் நேற்று (21.03.2016) மேற்கொண்டிருந்தார்.

பாடசாலையின் அதிபர் அவர்களினால் சில தினங்களுக்கு முன்னர் விடுக்கப்பட்டிருந்த கோரிக்கைக்கமைவாகவே பாடசாலையின் நிலவரங்களை நேரில் கண்டறிவதற்காக இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டது.

இப்பாடசாலையின் தேவைகள் தொடர்பில் விபரித்த பாடசாலையின் அதிபர்,
முதலாம் தர மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் இவ்வருடம் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், அம்மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் போதுமானதாக இல்லையெனவும் சுட்டிக்காட்டியதோடு , தொண்டர் அடிப்படையிலாவது ஒருவரை நியமிப்பதற்கான பொருளாதார உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். அத்தோடு பாடசாலைக்கான உடனடித் தேவையாகவுள்ள சில பௌதீக வளங்கள் தொடர்பாகவும் அதிபர் கோரிக்கையினையை முன்வைத்தார்.

பாடசாலையின் சுற்றுச் சூழல்களையும் வகுப்பறை வசதிகளையும் பார்வையிட்ட பொறியியலளர் அப்துர் ரஹ்மான் மிக நோர்த்தியான முறையில் பாடசாலையினுடைய சுற்றுச் சூழல் பேணப்படுவது தொடர்பில் அதிபருக்கும் ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்தார்.

அத்தோடு, தொண்டர் ஆசிரியர் ஒருவரை நியமிப்பதற்கான செலவுகளை இன்னும் சில வாரங்களுக்குள் வழங்குவதாகவும் ஏனைய தேவைகள் சிலவற்றை பூர்த்தி செய்து தருவதாகவும் வாக்குறுதியளித்தார்.

இந்த விஜயத்தில் NFGGயின் சிரேஸ்ட உறுப்பினரான ASM ஹில்மி மற்றும் மொகமட் நவாஸ் ஆகியோர் பங்கு பற்றியதோடு பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி அபிவிருத்தி சபை உறுப்பினர்களையும் அவர் சந்தித்து உரையாடினார்

LEAVE A REPLY