இன்று உலக நீர் தினம்

0
199

நீரும் தொழில் வாய்ப்பும் என்பதே இம்முறை உலக நீர் தினத்தின் பிரதான தொனிப் பொருளாகும்.

உலக நீர்த் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

1993 ஆம் ஆண்டு முதல் உலக நீர்த் தினம் இலங்கையில் கொண்டாடப்படுகிறது.

அத்துடன் உலக நீர்த் தினத்தை முன்னிட்டு அருகி வரும் நீர் நிலைகளை பாதுகாக்கவும் அவை அசுத்தமாவதை தடுக்கவும் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் கூறுகின்றது.

இலங்கையில் 45 வீதமானவர்கள் குழாய் ஊடாக குடி நீரைப் பெற்றுக் கொள்வதுடன் 85 வீதமானோர் ஏதாவதோர் வகையில் நீரைப் பெற்றுக் கொள்வதாக நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று (21) தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

LEAVE A REPLY