மலேஷியாவில் கடும் வெப்பம், 2 மாநிலங்களில் பள்ளிக்கூடங்கள் மூடல்

0
142

மலேஷியாவில் அதிகரித்த வெப்பத்துடன் கூடிய காலநிலை காரணமாக இரண்டு வடக்கு மாநிலங்களில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன.

கெடா மற்றும் பெர்லிஸ் ஆகிய விவசாய மாநிலங்களில் 39 டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் குறைந்தது இரண்டு நாட்களுக்கு பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன.

எல் நீனோ பருவநிலை விளைவு காரணமாக ஏற்பட்டுள்ள இந்த வெப்பக் காலநிலைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பெருமளவிலான மக்கள் திணறுகின்றனர்.

மே அல்லது ஜூன் மாதம் வரை இந்த வெப்பக் காலநிலை நீடிக்கும் என்று மலேஷிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதனால் காட்டுத் தீ, குடிநீர் தட்டுப்பாடு மற்றும் கடும் தூசு மூட்டம் ஏற்படக்கூடும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

LEAVE A REPLY