க.பொ.த சா/த பரீட்சையில் சாதனை படைத்த மட்டக்களப்பு வின்சன்ற் பாடசாலை மாணவிகள்

0
481

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

Batti Vincent Schoolஇலங்கை பரீட்சை திணைக்களத்தினால் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்ட 2015 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளின் படி, மட்டக்களப்பு மாவடத்தில் மாத்திரமின்றி கிழக்கு மாகாணத்திலும் முதலிடத்தை மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் உயர்தர பாடசாலை பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர் திருமதி. ராஜகுமாரி கனகசிங்கம் தெரிவித்தார்.

மேற்படி 2015 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் பாடசாலை அதிபர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

எமது பாடசாலையில் 2015 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளின்படி 9 பாடங்களிலும் 9 ஏ திறமை சித்திகளை 26 மாணவிகளும், 8 பாடங்களிலும் 8 ஏ 1 பி சித்திகளை 21 மாணிவிகளும் பெற்று எமது பாடசாலைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

குறித்த மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் உயர்தர பாடசாலையில் 2015 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையில் சாதனை படைத்த 46 மாணவிகளும் நேற்று (21) திங்கட்கிழமை பாடசாலைக்கு விஜயம் செய்து அவர்களுக்கு கற்பித்த அதிபர், ஆசிரியர்கள் ஆகியோருக்கு நன்றி செலுத்தினர்.

இதில் மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் உயர்தர பாடசாலை அதிபர் திருமதி. ராஜகுமாரி கனகசிங்கம், பிரதி அதிபர் திருமதி எஸ்.ரவிச்சந்திரா உட்பட கற்பித்த ஆசிரிய, ஆசிரியைகள், மாணவிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1---9-A-  26-DSC_5930 2----8-A-21-DSC_5962 3----9 A-26-8 A-21DSC_5948 5-DSC_6027 6-DSC_6008

LEAVE A REPLY