டி20 உலக கிண்ணம்: வங்காளதேசத்தை போராடி வென்றது ஆஸ்திரேலியா

0
125

‘சூப்பர் 10’ சுற்றின் 10-வது ‘லீக்’ ஆட்டம் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று நடைப்பெற்று வருகிறது. இதில் ‘குரூப் 2’ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா- வங்காளதேசம் அணிகள் மோதியது.

பேட்டிங்கிற்கு சாதகமான சின்னசாமி மைதானத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் சுமித் முதலில் பந்து வீச முடிவு செய்தார். வாங்காள தேச தொடக்க ஆட்டகாரர் சௌமிய சர்கார் 2 ரன்களில் வாட்சன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டகாரரான முகமது மிதுன் 23 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

வாங்களதேச அணி குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட்களை இழந்ததால், பெரிய பாட்னர்சிப்கள் அமையவில்லை. 20 ஓவர் முடிவில் அந்த அணி 5 விக்கெட்களை இழந்து 156 ரன்கள் எடுத்தது. கடைசியில் களமிறங்கிய மஹ்மதுல்லா அதிரடியாக ஆடி 29 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து அந்த அணி 156 ரன்கள் குவிக்க உதவினார். ஆஸ்திரேலியா தரப்பில் லெக் ஸ்பின்னர் ஆடம் ஷாம்பா 23 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஆஸ்திரேலியா. தொடக்க ஆட்டகாரர் வாட்சன் 21 ரன்களில் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க ஆட்டகாரர் உஸ்மான் கவாஜா அதிரடியாக 58 ரன்கள் எடுத்து ஆவுட்டானார். கேப்டன் சுமித் 14 ரன்கள், வார்னர் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் மேக்ஸ்வெல் அதிரடி காட்ட ஆஸ்திரேலியா வெற்றி இலக்கை நெருங்கியது. ஆனால் அல் ஹாசன் வீசிய 17 ஓவரில் மேக்ஸ்வேல் 26 ரன்னிலும், ஹாஸ்டிங்ஸ் 3 ரன்னிலும் ஆவுட்டாக ஆட்டத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் ஆல்ரவுண்டர் பால்க்னர் 18 வது ஓவரில் 3 பந்தை பவுண்டரிக்கு விரட்ட ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அல் ஹாசன் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

ஆஸ்திரேலியா லெக் ஸ்பின்னர் ஆடம் ஷாம்பா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

LEAVE A REPLY