(Photo)வாழைச்சேனை பிரதான வீதியில் விபத்து: ஒருவர் கவலைக்கிடம்

0
398

வாழைச்சேனை நிருபர்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு முன்பாக இன்று (திங்கள் கிழமை) மாலை 03.30 மணியளவில் இடம் பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாகவும், இதில் ஒருவரது நிலமை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பகுதியில் இருந்து மட்டக்களப்பு பக்கமாக ஓட்டமாவடிக்கு செல்வதற்கு வந்த மகேந்திரா கப் வாகனமும், மட்டக்களப்பு பகுதியில் இருந்து வாழைச்சேனை பக்கம்மாக கல்மடுவுக்கு செல்லவந்த ஆட்டோவும் மோதியதாலயே இவ் விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பிரதான வீதியில் இருந்து ஆட்டோ வலது பக்கமாக செல்லும் வீதியூடாக செல்வதற்கு முயற்சித்த வேலை எதிரே வந்த மகேந்திரா கப் வாகனத்திலே மோதுன்டதாலயே இவ் விபத்து நிகழ்ந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

சமுர்த்தி வீதி, வினாயகபுரம், வாழைச்சேனையைச் சேர்ந்த ஆட்டோவின் சாரதியான ரத்னசேன தவருபன் (வயது – 29) என்பவரும் ஆட்டோவில் பயணித்த பாடசாலை வீதி கல்மடு பிரதேசத்தைச் சேர்ந்த மாரிமுத்து கிருஸ்ணப்பிள்ளை என்பவருமே காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மகேந்திரா கப் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

3df47866-4f5c-49c9-ae17-6d166b391648 70a037a2-8a6e-4b16-af08-6138dc6e460a 77cea00d-ce8b-4249-be22-cd163322a33c 2453ed82-65de-420a-a803-b8e6f1bf4de2 8811f8e3-dbac-4ef1-ab4b-2853064ae786 34215212-2f59-49cb-9af6-4cba990b998d deedafca-dbc6-48c4-a0eb-fa7d95f84a80 f4cdddf7-93f4-4911-b073-1b13510b593d f4780a23-06bb-4fc0-8bc6-b6eecfed046b

LEAVE A REPLY