ஒப்பந்தத்தை மீறி கிரீஸ் நாட்டில் 1600 அகதிகள் தஞ்சம்

0
127

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடி செல்கின்றனர். ஆபத்தான கடல் பயணம் மூலம் துருக்கி மற்றும் கிரீஸ் நாடுகளின் தீவுகளில் கரையேறும் அவர்கள் அங்கிருந்து ஜெர்மனி, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளுக்கு நடைபயணமாக செல்கின்றனர்.

இந்நிலையில் அகதிகளைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம், துருக்கி நாடுகளுக்கு இடையே கடந்த வெள்ளிக்கிழமை ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி சட்டவிரோதமாக கிரீஸ் தீவுகளுக்கு வரும் அகதிகள் துருக்கிக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து அவரவர் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்.

ஆனால் ஐரோப்பிய யூனியன்-துருக்கி ஒப்பந்தத்தை மீறி வழக்கம்போல அகதிகள் தொடர்ந்து கிரீஸ் தீவுகளில் கரையேறி வருகின்றனர். கடந்த சில தினங்களில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் தஞ்சம் அடைந்துள்ளனர்.

துருக்கி அருகே கிரீஸ் தீவில் ஆயிரத்து 662 அகதிகள் தஞ்சமடைந்துள்ளனர். அதில், 830 பேர் ஜாவோஸ் தீவிலும், 698 பேர் லெஸ்போஸ் பகுதியிலும் வந்தடைந்தனர்.

LEAVE A REPLY