மரச் சின்னத்தை அணைத்தவாறுதான் மரணிப்பேன்: ஹசன் அலி

0
84

எனது அதி­கா­ரங்­களைப் பறித்­தெ­டுத்­த­வர்­க­ளது மேடையில், அதி­கா­ர­மில்­லாத மேடையில் நான் ஏறி என்னை விளம்­ப­ரப்­ப­டுத்திக் கொள்ள விரும்­ப­வில்லை. அத­னாலே நான் கட்­சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொள்­ள­வில்லை. என்னைக் கட்­சி­யி­லி­ருந்து விலக்­கி­னாலும் மரத்­தி­லி­ருந்து விலக்க முடி­யாது. நான் மரச்­சின்­னத்தை அணைத்­த­வாறே மர­ணிப்பேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் நாய­கமும் முன்னாள் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான எம்.ரி.ஹசன் அலி தெரி­வித்தார்.

என்னைக் கட்­சி­யி­லி­ருந்தும் விலக்கி விட்­ட­தாக ஒரு சிலர் வதந்­திகள் பரப்­பி­னாலும் விலக்கி விட்­ட­தாகக் கூறி எனக்கு இது­வரை கடிதம் அனுப்பி வைக்­கப்­ப­ட­வில்லை எனவும் அவர் தெரி­வித்தார்.

பால­மு­னையில் நடை­பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தேசிய மாநாட்டில் கட்­சியின் செய­லாளர் நாயகம் ஹசன் அலி கலந்து கொள்­ளாமை குறித்து வின­வி­ய­போதே அவர் ‘விடி­வெள்ளி’க்கு இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில் ‘அதி­கா­ர­மில்­லாத ஒரு மேடையில் ஏறு­வ­தற்கு அரு­கதை இல்லை என்­பதை உணர்ந்தேன். மேடையில் அதி­கா­ர­மற்ற வெறும் ஜட­மாக அமர்ந்­தி­ருக்க நான் விரும்­ப­வில்லை.

அதற்கு எனது மனச்­சாட்சி இட­ம­ளிக்­கவும் இல்லை.

இத­னாலே தேசிய மாநாட்டைப் புறக்­க­ணிக்க வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்டேன்.

என்னைப் புறந்­தள்­ளு­வ­தற்கு ஒரு கூட்டம் முயற்­சிக்­கி­றது. எனது அமை­தியைப் பயன்­ப­டுத்­திக்­கொண்டு செயற்­ப­டு­கி­றார்கள். தேசிய பட்­டியல் விவ­கா­ரத்தில் நான் அமை­தி­யா­கவே இருந்தேன். என்­றாலும் நான் தேசியப் பட்­டியல் எம்.பி பதவி கேட்டு சண்டை பிடிப்­ப­தாக மக்கள் மத்­தியில் தவ­றான கருத்­துக்­களைப் பரப்­பி­னார்கள்.

எனக்கு தேசிய பட்­டியல் எம்.பி பதவி தரு­வ­தாகக் கூறப்­பட்­டது. அவ்­வாறு கூறி நான் தேர்­தலில் போட்­டி­யி­டு­வதைத் தடுத்­தார்கள். இவ்­வாறு மூன்று தட­வைகள் என்னைத் தேர்­தலில் போட்­டி­யிட விட­வில்லை. நான் தடுக்­கப்பட்டேன். அமைச்­சரின் சகோ­த­ர­ருக்கு தேசி­யப்­பட்­டி­யலில் எம்.பி.பதவி வழங்­கப்­பட்ட போதும் அதற்கு எதி­ராக நான் பிர­சாரம் செய்­ய­வில்லை அமை­தி­காத்தேன்.

எனது அமை­தியை சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொண்­டார்கள். அமை­தி­யாக இருந்­ததால் எனது அதி­கா­ரங்­களைப் பறித்­தெ­டுத்துக் கொண்­டார்கள்.

மக்கள் என்னை நிரா­க­ரித்­தி­ருந்தால் நான் ஆறு­த­ல­டைவேன். ஆனால் மக்கள் என்னை நிரா­க­ரிக்­க­வில்லை. என்னைப் பழி­வாங்க நினைத்­தி­ருந்தால் தேர்­தலில் கள­மி­றக்கி தோற்­க­டித்து பழி வாங்­கி­யி­ருக்­கலாம். நான் மக்­களால் தோற்­க­டிக்­கப்­ப­ட­வில்லை. மக்கள் என்னை மதிக்­கி­றார்கள். மக்­களை அணு­க­வி­டாமல் திட்­ட­மிட்டு சதி செய்து விட்­டார்கள்.

நான் ஓய்வு பெற வேண்­டிய இந்தக் கடைசிக் கட்­டத்தில் என்னைப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருக்க விட்டு இரண்டு அல்­லது மூன்று வரு­டங்கள் அதி­கா­ரத்தைத் தந்து என்னைக் கௌரவப் படுத்­தி­யி­ருக்க வேண்டும். ஆனால் என்னைக் காலால் உதைத்து விட்­டார்கள்.
நாட்­டி­லுள்ள சட்­டத்தின் மூலம் என்னைக் கட்­சி­யி­லி­ருந்தும் வெளி­யேற்­றலாம்.

ஆனால் எனக்கும் மரத்­துக்­கு­மி­டையில் உள்ள உறவு சட்­டத்­துக்கும் அப்­பாற்­பட்­ட­தாகும். மரத்­தி­லி­ருந்து என்னை வேறாகப் பிரித்­தெ­டுத்து விட­மு­டி­யாது.

மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்­ரப்பின் பேச்­சுக்­களை தொகுத்து நூலொன்­றினை வெளி­யி­ட­வுள்ளேன். அந்த நூலினைத் தற்­பொ­ழுது எழுதிக் கொண்­டி­ருக்­கின்றேன். ஏன் மரச்­சின்­னத்­துடன் அஷ்­ரப்பின் கொள்­கை­க­ளினால் ஈர்க்­கப்­பட்டேன் எனும் விப­ரங்­களை நூலில் உள்­ள­டக்­கி­யுள்ளேன். தற்­போது 200 பக்­கங்கள் எழு­தி­யுள்ளேன். விரைவில் வெளி­யி­டு­வ­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்வேன்.

நான் யாருக்கும் அநி­யாயம் செய்ய இருக்­க­வில்லை. அப்­ப­டி­யா­னவன் நானல்ல. தேர்­தலில் என்னைப் போட்­டி­யிட வைத்து மக்களால் தோற்கடித்து பழிவாங்கியிருக்கலாம்.

ஆனால் இப்பொழுது நடைபெறுவது மறைந்திருந்து என்னைத்தாக்கி பழிவாங்கும் நடவடிக்கையாகும்.

எல்லாவற்றையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான். அவன் நிச்சயம் நியாயத்தின் பக்கம் இருப்பான் என்பதில் நான் மட்டுமல்ல மக்கள் அனைவரும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்றார்.

-Vidivelli-

LEAVE A REPLY