மட்டக்களப்பில் 152 வது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஸ்டிப்பு

0
147

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 152 வது பொலிஸ் வீரர்கள் தினம் நாடெங்கிலும் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் திங்கட்கிழமை மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலய முன்றலிலும் நிகழ்வுகள் நடந்தேறின.

மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சர் உபாலி ஜயசிங்ஹ தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களுக்கான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்ஹ பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் பொலிஸ் கொடியேற்றப்பட்டு உயிரிழந்த பொலிஸாரின் நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கப்பட்டு அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி ஹெட்டியாராச்சி உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தின் உதவிப் பொலிஸ் அத்தியட்சர்கள், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்டத்தில் உயிரிழந்த பொலிஸாரின் உறவினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையின் போது சுமார் 3100 இற்கும் மேற்பட்ட பொலிஸார் தமது இன்னுயிரைத் தியாகம் செய்திருப்பதாக பொலிஸ் அதிகாரிகள் தமது நினைவுரைகளில் குறிப்பிட்டனர்.

1a6e3e58-24f6-49d8-86f2-87b7b13b1621 2dd70938-78b2-47c7-b225-ff7a411ffc08 5b72911d-cc98-4596-b56e-cace46f2c758 30f07f4e-f754-4880-8a98-df09206a9b2d 324ff23d-b902-4975-97da-edd0d32a2a0a 611dbda3-657e-4ed2-b140-23a7775d6321 490809ad-9feb-4f75-97ce-4c418a30fa6f a08f3755-5c7f-4a3d-ab27-6d146ee4d641 ab1dcd51-6198-483b-a6a1-5eb49d0f0462 b2debbec-a5c7-4879-a6b2-9a61e6ad4f4f e187b31f-3432-4f4a-9b9f-3ead1d126fdf ed0138c9-bea3-441c-8412-7398f3f6bd6c

LEAVE A REPLY