ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 48ஆவது ஊடக செயலமர்வு

0
147

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 48ஆவது ஊடக செயலமர்வு ஹந்தஸ்ஸ அல்மனார் தேசிய பாடசலையில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த செயலமைர்வை கண்டி உடுநுவரை பிரதர்ஸ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த ஒருநாள் செயலமர்வில் உயர்தரத்தில் கல்விகற்கும் மற்றும் பல்கலைக்கழக தெரிவுக்காக காத்திருக்கும் 107 மாணவர்கள் கலந்துகொண்டனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் நவமணி பிரதம ஆசிரியருமான என்.எம். ஊடகம் பற்றிய அறிமுகவுரையையும், உப தலைவர் தாஹா முஸம்மில் ‘ஊடக அடிப்படையியல்’ என்ற தலைப்பிலும், பொருளாளர் ஏ.எச்.எம். பாயிஸ் ‘ஊடகம் ஒரு சமூக நோக்கு’ என்ற தலைப்பிலும், கலைவாதி கலீல் ‘ஊடகங்களில் தமிழ் மொழி’ என்ற தலைப்பிலும், நவமணி ஊடகவியலாளர் பிறவ்ஸ் முஹம்மட் ‘சமூக ஊடகங்களின் தாக்கம்’ என்ற தலைப்பிலும் விரிவுரைகளை நடாத்தினார்கள்.

மேலும் இச்செயலமர்வில் மீடியா போரத்தின் உபதலைவரும் தினகரன் தமிழ் பதிப்புகளுக்கு பொறுப்பாளருமான எம்.ஏ.எம். நிலாம், பத்தி எழுத்தாளர் சட்டத்தரணி ஏ.எம்.வைஸ், பத்திரிகை முறைப்பாட்டுக்குழுவின் தமிழ்பிரிவு அதிகாரி அமீர் ஹுசைன், நவமணி ஊடகவியலாளர் ஆதில் அலி சப்ரி ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிவைத்தனர்.

பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக தொழிலதிபர் என்.எம்.எம். ஷபீக், கௌரவ அதிதியாக அல்மனார் பாடசாலை அதிபர் எம்.ஜே.எம். ஹிஜாஸ், விசேட அதிதிகளாக தொழிலதிபர் எம்.ஜே.எம். றிஸ்வி, என்.எம். பாரிஸ் மற்றும் மாவட்ட இளைஞர் உத்தியோகத்தர் கங்கா மிரிஹல்ல ஆகியோர் கலந்துகொண்டனர்.

இறுதியில் கலந்துகொண்ட மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதன்போது பிரதர்ஸ் அமைப்பினால் முஸ்லிம் மீடியா போரத்துக்கு நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டது.

9f207ab8-97b7-46d5-9413-cb4749188e49 812a492b-752a-42ad-b181-757bf5c7fff1 36788f5e-70f2-4ee5-a20d-48314e195ee5 b83f0c31-a5fe-4d0d-85a8-8a220e9a224b f02697bf-f971-4316-b8a0-b588210ef8a9

LEAVE A REPLY