வெற்றி, தோல்விகளை கடந்து குறைகளை நீக்குவதில் அதிக கவனம் செலுத்துவோம்: அப்ரிடி

0
156

டி-20 உலகக் கிண்ண  கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 10 ஆட்டத்தில், இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கு அதிக அளவில் வாய்ப்புகள் இருந்தது. இந்த தோல்வியால் அந்நாட்டு ரசிகர்களை மட்டுமல்லாமல், முன்னாள் வீரர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷாகித் அப்ரிடி மீதும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும், இந்த தோல்வியின் எதிரொலியாக கேப்டன் பதவியில் இருந்து ஷாகித் அப்ரிடியை நீக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அப்ரிடிக்கு அதிக நெருக்கடி உருவாகியுள்ளதாகவே கருதப்படுகிறது.

இந்தியா உடனான போட்டியை தொடர்ந்து நாளை நியூசிலாந்து அணியுடன் பாகிஸ்தான் மோதுகின்றது. பஞ்சாப் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அப்ரிடி, வெற்றி, தோல்விகளை கடந்து தவறுகளை குறைப்பதில் அதிக கவனம் செலுத்துவோம் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசியதாவது:-

குறைபாடுகளை நீக்குவதில் கவனம் செலுத்துவோம். பேட்ஸ்மேன்களும், பந்துவீச்சாளர்களும் நல்ல பார்மில் உள்ளனர். குறைகளை நீக்குவதில்தான் அதிக முயற்சி தேவைப்படுகிறது.

மைதானத்தில் நூறு சதவீதம் பலத்துடன் விளையாடும் போது நான் திருப்தி அடைகிறேன். போட்டி முடிவுகள் என்னவாக இருந்தாலும், அதனால் எந்த பிரச்சனையும் இல்லை.

இவ்வாறு அப்ரிடி கூறினார்.

LEAVE A REPLY