இந்தோனேசியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து 12 பேர் பலி

0
117

இந்தோனேசியாவில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் 7 பயணிகளும், 6 சிப்பந்திகளும் பயணம் செய்தனர்.சுலாவேசி தீவில் போசே மாவட்டத்தில் கசிகுங்கோ கிராமத்தில் பறந்த போது தரையில் விழுந்தது. இதனால் ஹெலிகாப்டரின் பாகங்கள் நொறுங்கி தீப்பிடித்தது.

இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 12 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் மட்டும் காணவில்லை. எனவே அவரை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. விமானம் விழுந்து நொறுங்கிய இடம் அரசுக்கு எதிராக போராடும் கொரில்லா தீவிரவாதிகள் அதிகம் உள்ள பகுதியாகும். எனவே ஹெலிகாப்டரை தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.ஆனால் இந்தோனேசிய ராணுவம் மறுத்துள்ளது. விபத்து நடந்த பகுதியில் பலத்த மழை பெய்தது.

எனவே அங்கு தரை இறங்க முயற்சித்த போது ஹெலிகாப்டர் விபத்துக் குள்ளாகியிருக்கலாம் என ராணுவ செய்தி தொடர்பாளர் டடாங் சுலைமான் தெரிவித்துள்ளார்.இந்த விபத்து குறித்து ராணுவ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY