தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 70ற்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

0
208

எம்.ரீ. ஹைதர் அலி

திருமலை மாவட்டத்தின் தோப்பூர் சமூக அபிவிருத்தி பேரவையினால் தோப்பூர் கல்வி கோட்டத்திற்குட்பட்ட சுமார் 17 தமிழ், முஸ்லிம் பாடசாலைகளில் தரம் 05ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 70ற்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதள்களும் பதக்கங்களும் அணிவித்து கௌரவிக்கும் நிகழ்வு பாத்திமா பெண்கள் பாடசாலையில் அன்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதீதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் அவர்களும் கௌரவ அதீதியாக மூதூர் வலயக் கல்வி பணிப்பாளர் மன்சூர் அவர்களும் சிறப்பு அதிதிகளாக தோப்பூர் கோட்டக் கல்வி அதிகாரி மன்சூர் அலி, ஈச்சலம் பற்று கோட்ட கல்வி அதிகாரி லோகராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர்,

இவ்வாறானதொரு நிகழ்வு ஏற்பாடு செய்து இம்மாணவர்களை கௌரவிக்கப்படும் நிகழ்வானது மிகவும் பாராட்டத்தக்கதாகும். நாம் அனைவரும் கூடுதலாக தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப்பெற்ற மாணவர்களுக்கு மாத்திரமே பாராட்டு நிகழ்வுகளை நடாத்துகின்றோம். குறைந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு இப்பாடியானதொரு நிகழ்வு நடாத்தப்படுவது மிகவும் அறிதாகும்.

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவப்படுத்தவேண்டாம் என்று நான் கூறவில்லை அவர்களுடன் சேர்த்து இப்படியான குறைந்த புள்ளிகளைப்பெற்ற மாணவச் செல்வங்களையும் நாம் கௌரவப்படுத்த வேண்டும் ஏன் என்றால் குறைந்த புள்ளிகளை பெற்ற மாணவர்கள் தன் மனதில் நினைக்ககூடும் தான் இப்பரீட்சையில் சித்தியடையவில்லை அதனால் என்னுடைய கல்வி நடவடிக்கைகள் முடக்கப்பட்டு விட்டனவோ என்று இப்பிஞ்சு உள்ளங்களில் தோன்றலாம் அதற்காகவே அவ்வாறு கூறினேன்.

மேலும் உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகளின் கல்வியில் தரம் 5ஆம் புலமைப்பரிசில் பரீட்சையைத்தான் மையமாக வைத்து வழி நடாத்துகின்றனர். இதற்கு பிற்பாடு அவர்கள் தோற்றும் க.பொ.த. சாதாரணதரப்பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் பெற்றோர்களாகிய நாம் கவனம் செலுத்துவது மிகவும் அறிதாகவே காணப்படுகின்றது இதுதான் உண்மையும் கூட இதனால் நமது பிள்ளைகளின் எதிர்காலங்கள் கேல்விக்குறியாகவே காணப்படும். இப்பிள்ளைகளின் எதிர்காலங்கள் பெற்றோர்களாகிய உங்களிடமே இருக்கின்றது என தனதுரையில் தெரிவித்தார்.

அத்தோடு இந்நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளால் மாணவர்கள் சான்றிதள்களும் பதக்கங்களும் அணிவித்து கௌரவிக்கப்பட்டதோடு மாணவர்களின் பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY