(Photo) மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்கயளில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட கோஸ்டி பொலிஸாரிடம் சிக்கியது

0
102

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மூன்று பேரடங்கிய கொள்ளைக் கோஸ்டியை மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில், சம்மாந்துறை, மத்தியமுகாம் உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களிலும் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட குழுவினரே இவ்வாறு

கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.பி. ரசிக சம்பத் தெரிவித்தார்.

கொள்ளைக் கோஸ்டியினர் மண்டூர் வெந்தகாடு பகுதியில் நடமாடுவதாக பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கொள்ளையர்களினால் களவாடப்பட்டு நகைக் கடைகளில் விற்பனை செய்யப்பட்ட மூன்றரை பவுண் தங்க நகைகள் உருக்கிய நிலையில் மீட்கப்பட்டதுடன் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும் கொள்ளையிடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும் ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 11ஆம் கொலனியை சேர்ந்தவர்கள் எனவும் அவர் கூறினார்.

சந்தேக நபர்கள் களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளைச் சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் உபாலி ஜயசிங்ஹ மற்றும் களுவாஞ்சிகுடி பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சர் சிசிர பெத்த தந்திரி ஆகியோரின் ஆலோசனையின் கீழ் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.பி. ரசிக சம்பத் வழிகாட்டலின் கீழ் உபபொலிஸ் பரிசோதகர் எதிரிசூரியவின் தலைமையில் விசேட பொலிஸ் குழுவினர் இந்த விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிஸார் சிவிலுடையில் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தபட்டுவந்த நிலையிலேயே குறித்த கொள்ளையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தொடர்ச்சியான கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.பி. ரசிக சம்பத் தெரிவித்தார்.

8e99a807-68af-4704-801e-cee1deebe48f ba572f1d-b0cf-4c88-ad70-77b7292e083d dca00701-755f-44d1-9c48-cfb72dbb0901

LEAVE A REPLY