நேர்வழியில் செல்ல அல்குர்ஆனின் வழிகாட்டலைப் பின்பற்றினாலே போதும்: மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராசா

0
534

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

வழிகெட்டு நெறி கெட்டுத் தடுமாறாமல் நேர்வழியில் செல்வதற்கு அல்குர்ஆனின் வழிகாட்டலைப் பின்பற்றினாலே போதும் பல பிரச்சினைகளுகப்கு முற்றுப் புள்ளி வந்து விடும் வேறெந்த வழிமுறையையும் தேடியலையத் தேவையில்லை என மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராசா தெரிவித்தார்.

வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான சேவைகளினூடாக மனித நேயப் பணி ளுநசஎiபெ ர்ரஅயnவைல வாசழரபா நுஅpழறநசஅநவெ யனெ னுநஎநடழிஅநவெ ளுர்நுனு அமைப்பும் லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த போதையில்லா உலகம் காண்போம் என்ற தொனிப்பொருளிலமைந்த போதைத் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

ஏறாவூர் றஹுமானியா வித்தியாலயத்தில் ஞாயிறன்று மாணவர்களுக்காக இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் அங்கு தொடர்ந்து உரையாற்றிய நீதிபதி எம். கணேசராசா கூறியதாவது,

ஆரம்பத்திலிருந்தே போதை வஸ்துப் பாவினையை இஸ்லாம் வெறுத்து வந்திருக்கின்றது. போதையைப் பற்றி அல் குர்ஆனும் கடுமையாக எச்சரிக்கின்றது. நபிகள் நாயகமும் போதை வஸ்து விடயத்திலே சமூகத்தாரை கடுமையாக எச்சரித்து தண்டனைகளையும் அறிவித்திருக்கின்றார்கள்.

நீங்கள் அல்குர்ஆனை மத்ரசாக்களிலும் இஸ்லாம் பாடத்தை பாடசாலைகளிலும் கற்கின்றபோது அல்குர்ஆனிய நடைமுறைகளைப் பின்பற்றி ஒழுகினால் எந்தவிதமான தீங்கும் செய்ய மாட்டீர்கள்.

நேர்வழியிலே நீங்கள் நடக்க அல்குர்ஆன் உங்களுக்கு வழிகாட்டும்.

பாடசாலைகளிலே நீங்கள் கற்றுக் கொள்கின்ற விடயங்கள் உங்களுக்குப் போதுமானதாக இல்லாவிட்டாலும் அது பற்றிப் பரவாயில்லை, அதனை ஈடுசெய்வதற்கு அல்குர் ஆனிலே சொல்லப்பட்ட பல விடயங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டப் போதுமானவையாக இருக்கின்றன.

குடும்பத்தை சிறப்பாகப் பராமரிக்க முடியாதவர்கள், பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்கள் போன்றோர் பெரும்பாலும் போதை வஸ்துவுக்கு அடிமையானவர்களாகவே இருக்கின்றார்கள்.

அதே நேரத்தில் போதையில் தமது வாழ்நாளைக் கழிப்பவர்கள் சொர்க்க வாடையையும் நுகர முடியாது என்று இஸ்லாம் எச்சரிக்கின்றது.

போதை வஸ்துப் பற்றிய இஸ்லாத்தின் போதனைகள் வீடுகளிலும் பாடசாலைகளிலும், பள்ளிவாசல்களிலும் வழங்கப்பட வேண்டும்.

குறிப்பாக இந்த போதை வஸ்துப் பாவினை விடயத்தில் அல்குர்ஆனின் வழிகாட்டலைத் தெளிவுபடுத்தினாலே போதும் நீங்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வந்து விடும்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் போதை வஸ்துப் பாவினை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேலே அதிகரித்துக் காணப்படுவது ஒரு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக ஊர்களான முஸ்லிம் பிரதேசங்களிலும் போதை வியாபாரமும் பாவினையும் காலூன்றியுள்ளது.

இப்பொழுது போதைப் பொருளுக்கு அடிமையான நிலையில் பல இளைஞர்கள் குறிப்பாக பாடசாலை மாணவர்கள் எம்முன்னால் வந்து நிற்கின்றபோது அவர்களுக்குப் பெருத்த தண்டனைகளைக் கொடுப்பதற்கு வழிதேடுவதை விட பெரும்பாலும் எப்படி அவர்களுக்கு நல்வழி காட்டலாம் என்பது பற்றியே நான் அதிக கவனம் எடுக்கின்றேன்.

போதைப் பொருள் பாவினைக்கு அடிமையாகும் இளையவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கினால் போதைப் பாவினையை கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்ற ஒரு சிந்தனை பல மட்டங்களில் இருந்தாலும் நான் அப்படியான கண்ணோட்டத்தில் இந்த விடயத்தை நோக்குவதில்லை.

வழிகெட்டுப் போக நினைப்பவர்களை சமுதாயத்திற்கு வேண்டியவர்களாக மாற்றுவதிலேயே நான் அதிக கவனம் செலுத்துகின்றேன்.

போதைக்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வு, விழிப்புணர்வு என்பவை பலனளிக்கக் கூடும்.

போதைப் பொருள் பாவினை அதிகரித்திருப்பதற்குப் பல பின்புலங்கள் உண்டு, அரசியலும், பெரும் வர்த்தகமும் இந்த விடயத்தில் பின்னணியில் இருப்பது வெளிப்படையான விடயம்.

அவர்கள் உங்களை ஒரு கருவியாகத்தான் பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையைச் சீரழிக்கின்றார்கள்.

இதனை ஒட்டு மொத்த சமுதாயமும் எதிர்க்க வேண்டும்.

போதை வஸ்தை ஒழிக்க முற்படுகின்றபோது பல சவால்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள வேண்டிவரும்.

பெற்றோர்கள் தமது பிள்ளைகள் விடயத்தில் மிகவும் அவதானமாக கண்காணிப்புடன் இருந்து கொள்ள வேண்டும்.

இந்நிகழ்வில் ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிந்தக பீரிஸ், ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எச்.எம். தாரிக், செட் அமைப்பின் தலைவர் கே. அப்துல் வாஜித் உட்பட இன்னும் பல அதிகாரிகளும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

DSC02675 DSC02692 DSC02697 DSC02707 DSC02726

LEAVE A REPLY