இன்றும் நாளையும் பூமிக்கு அருகில் இரு வால் நட்சத்திரங்கள் பயணிக்கவுள்ளன

0
210

பூமிக்கு அருகாமையில் இன்றும் (21) நாளையும் (22) இரு வால் நட்சத்திரங்கள் கடந்து செல்லவுள்ளன.கடந்த 250 ஆண்டுகளில் பூமிக்கு மிக நெருக்கமாக கடந்து செல்லவுள்ள வால் நட்சத்திரங்களாக இவை அமையவுள்ளன என்று நாஸா அறிவித்துள்ளது.

252P/LINEAR என்ற வால் நட்சத்திரம் இன்று பூமிக்கு 3.3 மில்லியன் மைல்கள் வரை நெருங்கிய தூரத்தில் கடந்து செல்லும் என்றும் அந்நட்சத்திரம் 750 அடி அளவு கொண்டது என்றும் தெரிவித்துள்ள நாஸா வானிலயாளர்கள் இந்த வால் நட்சத்திரத்தை கடந்த 2000 ஆம் ஆண்டு கண்டுபிடித்தனர்.

இந்நிலையில் ஒருசில மாதங்களுக்கு முன்னர் கண்டுடிக்கப்பட்ட P/2016 BA14 என்ற வால் நட்சத்திரம் நாளை (22) பூமிக்கு அருகால் பயணிக்கவுள்ளது. இது பூமியில் இருந்து 2.2 மில்லியன் மைல்கள் நெருங்கி பயணிக்கும் என்று வானியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நாளை பூமியை நெருங்கிவரும் வால் நட்சத்திரம் இதுவரை பதிவான வரலாற்றில் பூமிக்கு மிக நெருக்கமாக வரும் மூன்றாவது வால் நட்சத்திரமாகவும் அமையவுள்ளது. இதற்கு முன்னர் 1770 ஆம் ஆண்டும் 1983 ஆம் ஆண்டும் இரு வால் நட்சத்திரங்க பூமிக்கு மிக நெருக்கமாக பயணித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வால் நாட்சத்திரங்கள் ஒப்பீட்டளவில் சிறியதாக இருப்பதால் அவை பூமியை நெருங்கும்போதும் சக்திவாய்ந்த தொலைநோக்கிகளைக் கொண்டு மாத்திரமே பார்க்க முடியும் என்று நாஸா அறிக்கை ஒன்று குறிப்பிட்டுள்ளது.

எனினும் இந்த வால் நட்சத்திரங்களால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அது குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY