விராட் கோலி தலை வணங்கியதற்கான காரணம் வெளியானது..!

0
689

ஐசிசி இருபது – 20 உலகக் கிண்ணத் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது.

விராட் கோலியின் அபார ஆட்டம் மூலம் வெற்றியை இந்திய வசமாக்கி ரசிகர்கள் அனைவரையும் மகிழ்ச்சி கடலில் மூழ்க செய்தார். பாகிஸ்தான் முதலில் நிர்ணயம் செய்த 119 ஓட்ட இலக்கை நோக்கி ஆடிய இந்தியாவுக்கு தொடக்கம் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது.

ரோகித் சர்மா 10 ஓடடங்களுடனும், ஷிகர் தவான் 6 ஓட்டங்களுடனும், சுரேஷ் ரெய்னா ஓட்டம் எதுவும் இன்றி ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.

இதனையடுத்து விராட் கோலியும், யுவராஜ்சிங்கும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து காப்பாற்றினர். நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி சீராக ஓட்டங்களை எடுத்து ரசிகர்களை பரவசப்படுத்தினார்.

யுவராஜ் சிங் ஆட்டமிழந்ததை தொடர்ந்து விராட் கோலியும், கேப்டன் டோனியும் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்திய அணி 15.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 119 ஓட்டங்களை பெற்று 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

விராட் கோலி 55 ஓட்டங்களுடனும் (37 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்), டோனி 13 ஓட்டங்களுடனும் (9 பந்து, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கருக்கு பின்னர் மைதானத்தை கணித்து, எதிரணியின் களத்தடுப்பு நிலைகளைக் கணித்து ஆடக்கூடிய ஒரே வீரர் என்பதையும் விராட் கோலி நிரூபித்தார்.

விராட் கோலி தனது அரை சதத்தை இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கருக்கு சமர்ப்பனம் செய்தார்.

விராட் கோலி அரைசதம் அடித்ததும் ரசிகர்கள் பாராட்டு மழையில், சச்சின் தெண்டுல்கருக்கு மைதானத்தில் இருந்தவாறு தலைவணங்கினார்.

சச்சின் டெண்டுல்கரும் கடும் மகிழ்ச்சி அடைந்தார். இந்திய அணி இலக்கை அடைந்ததும் சச்சின் டெண்டுல்கர், அமிதாப் பச்சன் உள்ளிட்டோரும் தேசிய கொடியை அசைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

விராட் கருத்து தெரிவிக்கையில், யுவராஜ் வானிலையானது புயலாகி பின்னர் தடாலடியாகி விடுகிறது. இந்த செயல்பாடுகள் அவருக்கு மிகவும் நல்லது என்றே நான் நினைக்கின்றேன். ”நான் சச்சின் டெண்டுகல்கரை பார்த்துதான் கிரிக்கெட் விளையாட தொடங்கினேன். 67 ஆயிரம் மக்கள் மற்றும் அவருடைய முன்னிலையில் இதனை செய்வதே பெரியதொரு உணர்வாக நினைக்கின்றேன்.

இதனையடுத்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர் “இந்திய அணியின் பெரிய வெற்றி!! இன்னிங்ஸ் மற்றும் விராட் கோலியின் சைகைக்கு (அரைசதம் அடித்ததும் விராட் கோலி தலைவணங்கினார்) நன்றி!

இந்திய அணி விளையாட்டு முடித்ததும் என்னை நோக்கி கையசைத்தனர்… அணியை விட்டு விலகியது போன்று என்னால் உணர முடியவில்லை.

நாடு முழுவதும் இந்தியாவின் வெற்றியானது கொண்டாடப்பட்டது. இந்திய ராணுவ வீரர்களும் தங்களது அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர்.

LEAVE A REPLY