இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் குறித்து கிரிக்கெட் வீரர்களின் கருத்து

0
204

இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் குறித்து ‘டுவிட்டர்’ மற்றும் பேட்டியின் வாயிலாக கிரிக்கெட் வீரர்கள் பதிவு செய்த கருத்துகள் வருமாறு:-

சச்சின் தெண்டுல்கர் (இந்திய முன்னாள் வீரர்): இது சிறப்பு வாய்ந்த வெற்றி. நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலிக்கு நன்றி. ஆட்டம் முடிந்து இந்திய வீரர்கள் தங்களது ஓய்வறைக்கு திரும்பிய போது, என்னை நோக்கி கை அசைத்தபடி சென்றனர். அணியை விட்டு வெளியேறி விட்டதாக ஒரு போதும் நினைத்ததில்லை. அதைத் தான் அப்போதும் உணர்ந்தேன்.

ஷேன் வாட்சன் (ஆஸ்திரேலியா): நாக்பூர் ஆடுகளத்தை விட ஈடன்கார்டனில் பந்தின் சுழற்சி அதிகமாக இருந்தது. வியப்புக்குரிய இந்த மோதல் பார்க்க சுவாரஸ்யமாக இருந்தது.

கிளைன் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா): இந்த ஆடுகளத்தில் 50 ரன்கள் எடுப்பது என்பது ஏறக்குறைய 237 ரன்களுக்கு சமம் ஆகும்.

சோயிப் அக்தர் (பாகிஸ்தான் முன்னாள் வீரர்): கடந்த 20 ஆண்டுகளில் நான் பார்த்த மட்டில் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் வல்லவராக விராட் கோலி விளங்குகிறார். ஆனால் பாகிஸ்தான் அணியும் கடுமையாக முயற்சித்தது. வெற்றியை தான் பெற முடியவில்லை.

முகமது கைப் (இந்திய முன்னாள் வீரர்): ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் போது பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளத்தில் நமது அணியை கோலி காப்பாற்றினார். இப்போது சுழற்பந்து வீச்சுக்கு உகந்த ஆடுகளத்திலும் அவர் மீண்டும் அசத்தி இருக்கிறார்.

சக்லைன் முஷ்டாக் (பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர்): பாகிஸ்தான் அணி ஆடுகளத்தை சரியாக கணிக்கவில்லை. இது போன்ற முக்கியமான, எதிர்பார்ப்புக்குரிய ஆட்டத்தில் பிரதான சுழற்பந்து வீச்சாளருடன் விளையாடி இருக்க வேண்டும். 4 வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்துவதற்குரிய ஆடுகளமாக இது இருக்கவில்லை.

இம்ரான் கான் (பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்): விராட் கோலியிடம் நிறைய திறமை இருக்கிறது. அவரைத் தான் இந்திய அணி சார்ந்து இருக்கிறது. அவர் ஒரு நட்சத்திர வீரர். எதிர்காலத்தில் ஒட்டுமொத்த கிரிக்கெட் வீரர்களில் சிறந்த வீரராக அவர் உருவெடுக்கப்போகிறார். அந்த அளவுக்கு அவரிடம் திறமை இருக்கிறது. அவரிடம் பலவீனத்தை கண்டறிவது கடினம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY