தனது மகளை கொலை செய்ய மஹிந்த திட்டம் தீட்டியதாக சந்திரிகா தெரிவிப்பு

0
114

தனது மகளை கொலை செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச திட்டம் தீட்டியிருந்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

சுதந்திர கட்சியின் உறுப்பினர்களை தெளிவுபடுத்தும் கூட்டம் ஒன்று நேற்று களனி ஹுனுப்பிட்டியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த 9 ஆண்டுகளாக தான் அரசியலிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாகவும், கட்சியிலிருந்த அனைவருக்கும் தன்னுடன் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்திலும் திருடர்கள் சிலர் இருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இது வரைகாலமும் பொறுமையுடன் செயற்பட்டு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது கடுமையான நடவடிக்கையினை எடுக்கவுள்ளதாக சந்திரிக்கா குமாரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY