நாள் சம்பளத்தில் கடமையாற்றுவதற்கு சாரதிகள் நியமிக்கப்படும்: அமைச்சர் அசோக் அபேசிங்ஹ

0
142

வாழைச்சேனை நிருபர்

வாழைச்சேனை இலங்கை போக்குவரத்து சாலையில் நிலவும் குறைபாடகள் நிவர்த்தி செய்யப்படுவதுடன் உடனடியாக நாள் சம்பளத்தில் கடமையாற்றுவதற்கு பத்து சாரதிகள் நியமிக்கப்படும் என்று போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்ஹ தெரிவித்தார்.

நேற்று (20.03.2016 வாழைச்சேனை இலங்கை போக்குவரத்து சாலைக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள குறைபாடுகளை கேட்டறிந்த பின்னர் சாலை ஊழியர்கள் மத்தியில் உரையாடும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

நாடலாவிய ரீதியில் 104 போக்குவரத்து சாலைகளை ஐம்பது சாலைகளாக குறைக்கவுள்ளதுடன், சுயவிருப்பில் செல்வதற்கான திட்டத்தினையும் அமுல்படுத்தவுள்ளதாகவும் கட்டாயத்தில் எந்த ஊழியரையும் வேலையில் இருந்து இடைநிறுததுவதற்கான திட்டம் எதுவும் இல்லை ஊழியர்களின் முயற்சியினால்தான் போக்குவரத்து சாலைகளின் வளர்ச்சி தங்கியுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இலங்கை போக்குவரத்து சாலை ஊழியர்களின் Etf, EPF பணம் செலுத்தப்படாமல் பல லட்சம் ரூபா நிலுவையாகவுள்ளதாவும் அப்பணத்தினை செலுத்துவற்கு திரைசேரியுடன் பேச்சுவார்த்தை இடம் பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

வாழைச்சேனை போக்குவரத்து சாலையின் முகாமையளர் எம்.ஐ.அஸீஸ் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் போக்குவரத்து அமைச்சின் உயர் அதிகாரிகளும் பிரதான பிராந்திய முகாமையாளர் ஏ.எல்.சித்தீக், பிராந்திய செயலாற்று முகாமையாளர் எஸ்.கணகசுந்தரம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

நேற்று காலை பிரதி அமைச்சர் ரிதிதென்ன பிரதேசத்திற்குச் சென்று
ரிதிதென்ன புகையிர தரிப்பிடத்தை உப புகையிரத நிலையமாக தரம் உயர்த்தும் நிகழ்வில் கலந்து கொண்டதுடன் ரிதிதென்னயில் இருந்து புனானை வரை புகையிரதத்தில் பயணம் செய்தார்.

அத்துடன் பிரதி அமைச்சர் இலங்கை போக்குவரத்து சபையின் ரிதிதென்ன சாலைக்கு விஜயம் மேற்கொண்ட பிரதி அமைச்சர் ரிதென்ன சாலையின் குறைகளை கேட்டறிந்து கொண்டதுடன் சாலையில் இரவு கடமை புரியும் ஊழியர்களின் நலன்கருதி மெத்தை மற்றும் நுளம்பு வலைகளும் வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில் புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் பி.ஏ.பி.ஆரியரத்ன போக்குவரத்து அமைச்சின் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0a8ac95b-260f-4441-a00b-11e62f762f16 0ed66609-c5be-4801-8dd7-488fd4f4505a 05a9cbe8-92a3-49a1-b3be-4d308229181e 6be4b8e4-f1f5-4bfc-9f48-e592f2b8d3f4 6ed3938f-b3f6-43f5-9623-7ce0e1ed08eb 07bb1a2b-96de-43e5-a4c6-0d5d8576b9a6 21b34816-fcf2-40dc-a39b-24cfdfcc0c59 67aa55b6-30f5-44c9-82ab-d4a2c1ee50e8 bf5818b1-7008-4b49-ab4e-b119608ab957 cf08f69c-aef4-4ef3-a00b-c0a41be2d4ee

LEAVE A REPLY