முதல் நாள் சமைத்து எஞ்சிய உணவை மறுநாள் சாப்பிடக்கூடாது ஏன் ?

0
442

இன்றைய தலைமுறையினர் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை செலுத்தி வருகின்றனர். இதற்கு அதிகரித்து வரும் நோய்கள் தான் முக்கிய காரணம்.

இதனால் ஏராளமானோர் தாங்களே சமைத்து சாப்பிட ஆரம்பித்துவிட்டனர். ஆனால் இன்று பெரும்பாலான குடும்பத்தினர் செய்யும் ஓர் தவறு என்றால் அது முதல் நாள் சமைத்து எஞ்சிய உணவை மறுநாள் சூடேற்றி உண்பது தான்.

இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படுவதற்கு பதிலாக, ஏராளமான பிரச்சனைகளைத் தான் சந்திக்க வேண்டியிருக்கும். இங்கு ஏன் முதல் நாள் சமைத்து எஞ்சிய உணவை மறுநாள் சாப்பிடக்கூடாது என்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

உணவை சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்து பதப்படுத்தும் போது, சமைத்த உணவில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி தொடர்ந்து இருப்பதோடு, எஞ்சிய உணவுகள் நொதிக்க ஆரம்பித்து, அதில் உள்ள அசிட்டிக் அளவு இன்னும் அதிகரிக்கும். இப்படிப்பட்ட உணவை உட்கொண்டால், அசிடிட்டி பிரச்சனையை சந்திக்க வேண்டிவரும்.

சமைத்து எஞ்சிய உணவை ஃப்ரிட்ஜில் வைக்கும் போது, உணவில் உள்ள கிருமிகள் ஃப்ரிட்ஜில் உள்ள இதரை உணவுப் பொருட்களை தாக்கி, குடும்பத்தினரை எளிதில் நோய்வாய்ப்பட வைக்கும். பொதுவாக உணவை சமைத்த பின் உடனேயே ஃப்ரிட்ஜில் வைப்பதில்லை. பல மணிநேரம் கழித்து தான் உள்ளே வைப்போம்.

இதனால் சமைத்த உணவில் பாக்டீரியாக்கள் அதிகமாக வளர்ச்சியடைந்து, அதன் விளைவாக ஃபுட் பாய்சனை உண்டாக்கும். அதிலும் உணவை சமைத்த 2 மணிநேரத்தில் ஃப்ரிட்ஜில் வைக்காவிட்டால், பாக்டீரியாக்கள் வேகமாக வளர்ச்சியடையுமாம்.

சமைக்கும் போது உயர் வெப்பநிலையில் வைத்து சமைக்கும் போது உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அழிந்துவிடும். அதிலும் அதனை ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் மீண்டும் சூடேற்றும் போது, உணவில் உள்ள சத்துக்கள் முழுமையாக நீங்கி, அதனை சாப்பிடுவதே வீணாகிவிடும். எனவே முடிந்த வரை சமைத்த உணவை அப்போதே காலி செய்ய முயலுங்கள்.

உணவை சமைத்து அதனை உட்கொண்ட பின் தான் ஃப்ரிட்ஜில் வைப்போம். குறிப்பாக வெப்பமாக இருக்கும் போது அதனை ஃப்ரிட்ஜில் வைக்கமாட்டோம். நன்கு குளிர்ந்த பின் தான் வைப்போம். இப்படி செய்வதால் பாக்டீரியாக்கள் மற்றும் நுண்ணுயிரிகள் உணவை முழுமையாக பாழாக்கிவிடும். பின் என்ன பல்வேறு வயிற்று பிரச்சனைகளை சந்திக்க வேண்டியது தான்.

LEAVE A REPLY