2015ம் ஆண்டு க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் வாழ்த்துச்செய்தி

0
147

கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும் கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் சார்பாக மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.

அத்தோடு, பல பிரதேசங்களில் வறுமைக் கோட்டின்கீழ் வாழும் மாணவர்கள் அதிலும் குறிப்பாக கல்குடாப் பிரதேசத்தில் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் பல மாணவர்கள் இப்பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்துள்ளனர். அவர்களது கல்வித்தரம் உயரும் காலம் இன்று தோன்றியுள்ளதோடு, இப்பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரத்தில் கல்வி கற்பதற்கு தெரிவான அனைத்து மாணவ, மாணவிகளும் சிறந்த முறையில் கல்வியினை மேற்கொண்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி இப்பிரதேசத்திற்கும், இம்மக்களுக்கும், சிறந்த சேவைகளை வழங்கி பெருமை சேர்க்க வேண்டுமென்று எமது நிறுவனத்தின் சார்பாக வாழ்த்துவதோடு, இறைவனையும் பிரார்த்திக்கின்றோம்.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, இம்மாணவர்களின் பெறுபேறுகள் சிறந்த முறையில் அமைய பல தியாகங்களுக்கு மத்தியில் கரிசினை காட்டிய பாடசாலையின் அதிபர்கள், இவர்களுக்கு கற்பித்த ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் இம்மாணவர்களின் பெற்றோர்கள், அனைவருக்கும் எமது நிறுவனத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அத்தோடு, நாடளாவிய ரீதியில் சிறந்த பெறுபேறுகளை பெற்று தெரிவான அனைத்து மாணவ மாணவிகளுக்கும் எமது நிறுவனத்தின் சார்பாக நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதிலும் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்.

LEAVE A REPLY