122 ஓட்டங்களில் சுருண்டது இலங்கை அணி

0
170

ன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கும் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், இலங்கை அணியும் விளையாடி வருகின்றன.

கடந்த போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய தன்னம்பிகையுடம் உள்ளது வெஸ்ட் இண்டீஸ். இலங்கை அணியும் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியிருந்தாலும் பெரிய அணிகளுக்கு எதிராக அந்த அணி திணறி வருகிறது.

7.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. தில்ஷானும், சந்திமலும் தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கினார்கள். நடுவரின் தவறான முடிவால் தில்ஷன் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். இலங்கையின் முக்கிய பேட்ஸ்மேனான சந்திமல் 12 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதனை அடுத்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 122 ரன்கள் எடுத்தது.

பெரேரா அதிகப்பட்சமாக 40 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் லேக் ஸ்பின்னர் பத்ரி 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

பலமான வெஸ்ட் இண்டீஸ் அணி 123 ரன்களை எளிதாக விரட்டி பிடிக்கும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது.

LEAVE A REPLY