வீராட் கொஹ்லியிடமிருந்து பாகிஸ்தான் கற்றுக்கொள்ள வேண்டும்: சுகைப் மாலிக்

0
288

கொல்கத்தாவில் நேற்று நடந்த டி20 உலக கிண்ண ஆட்டத்தில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது. உலக கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானை இந்தியா தொடர்ச்சியாக 11 ஆட்டங்களில் வென்று சாதனைப் படைத்துள்ளது.

இந்த தோல்விக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக் “ எங்களுடைய ஸ்கோர் போதுமானதாக இல்லை. வீராட் கோலியை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். இரண்டு அணிகளுக்கும் இடையில் உள்ள ஒரெ வித்தியாசம் வீராட் கோலி மட்டும்தான்.

தனது திறமை மீது நம்பிக்கை வைத்து விளையாடுவது வீராட் கோலியின் வெற்றிக்கு முக்கிய காரணம். அனைத்து வகையான சூழ்நிலைகளிலும் எப்படி விளையாடுவது என்று அவருக்கு தெரிகிறது. நீங்கள் தான் உங்களுடைய சிறந்த பயிற்சியாளர். உங்களுக்குள் கேள்வி எழுப்பினால் கண்டிபாக பதில் கிடைக்கும். அவரிடமிருந்து பாகிஸ்தான் கற்றுக்கொள்ள வேண்டும். நாங்கள் எங்களுடைய பேட்டிங்கை மேம்படுத்த வேண்டியது அவசியம்” என்று மாலிக் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY