ஆப்கானிஸ்தானை விழ்த்தியது தென் ஆப்பிரிக்கா

0
131

இன்று மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற டி20 உலக கிண்ணத்தின் சூப்பர் 10 ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய திர்மானித்து. கடந்த ஆட்டத்தில் அசத்திய தென் ஆப்பிரிக்க தொடக்க ஆட்டகாரர் அம்லா இன்று 5 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் டி காக் (44), டூ பிளிஸ்சிஸ் (41), டி வில்லியர்ஸ்(69) ஆகியோர் சிறப்பாக ஆடி நல்ல ஸ்கோரை எடுக்க உதவினார்கள். 20 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட்களை இழந்து 209 ரன்கள் எடுத்து. டி வில்லியர்ஸ் 29 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார்.

210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கியது ஆப்கானிஸ்தான். ஆப்கான் தொடக்க ஆட்டகாரர் முகமது ஷெசாத் தென் ஆப்பிரிகாவின் வேக பந்து வீச்சை நாலபுறமும் பறக்கவிட்டார். இதனால் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்று நினைத்த தென் ஆப்ரிக்கா அணியினருக்கு பதற்றம் தொற்றிக்கொண்டது. முகமது ஷெசாத் 19 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து மோரிஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு களமிறங்கிய வீரர்களும் தங்கள் பங்குக்கு அதிரடியாக ஆடி ஆட்டமிழந்தனர். தென் ஆப்ரிக்காவின் பந்து வீச்சை ஆப்கானிஸ்தான் வீரர்கள் எதிர்க்கொண்டு ரன் குவித்த விதம் அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. இருந்த போதிலும் ஆப்கானிஸ்தானால் வெற்றி இலக்கை அடைய முடியவில்லை.

20 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் 10 விக்கெட்களை இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 27 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா வீரர் மோரிஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

LEAVE A REPLY