திடீர் புகை எதிரொலி: அவசரமாக தரை இறங்கிய பிலிப்பைன்ஸ் விமானம்

0
216

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டது. பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானத்தில் 250 பேர் பயணம் செய்தனர்.

விமானம் புறப்பட்ட 10 நிமிடத்தில் விமானி அறையில் என்ஜினில் இருந்து திடீரென புகை கிளம்பியது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமானி இது குறித்து மணிலா விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

மேலும், விமானத்தை அவசரமாக தரை இறக்கவும் அனுமதி கோரினார். அதற்கு விமான நிலைய அதிகாரிகள் சம்மதித்தனர். அதை தொடர்ந்து விமானம் மீண்டும் மணிலா திருப்பப்பட்டு அங்குள்ள விமான நிலையத்தில் அவசரமாக தரை இறக்கப் பட்டது.

இதை தொடர்ந்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் தயார் நிலையில் இருந்த தீயணைப்பு படை வீரர்கள், விமான என்ஜீனை பரிசோதித்தனர். விமானம் தரை இறக்கப்பட்டதன் மூலம் 250 பயணிகளும் உயிர் தப்பினர்.

LEAVE A REPLY