இந்த ஆட்சி மாற்றத்தினால் ஒற்றுமை ஏற்பட்டுள்ளது: சிப்லி பாறூக்

0
190

வாழைச்சேனை நிருபர்

நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் என்பது சிறுபான்மை மக்களின் ஒற்றுமையினால் ஏற்பட்ட ஒரு ஆட்சி மாற்றம், இந்த ஆட்சி மாற்றத்தினால் ஒற்றுமை ஏற்பட்டுள்ளது என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டில் வறிய குடும்பங்களை சுயதொழில் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் தையல் இயந்திரங்களை கையளிக்கும் நிகழ்வு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
சிறுபான்மை சமுகத்திற்கு ஏதாவது விடுதலை கிடைக்க வேண்டும், அந்த விடுதலையின் ஊடாக சிறுபான்மை சமுகம் நல்ல முறையில் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் புலிகள் இயக்கத்தோடு சேர்ந்து முஸ்லீம் பிள்ளைகளும் போராடினார்கள். ஆனால் புலிகள் இயக்கத்தின் துரதிஸ்டவசம் அவர்களது துப்பாக்கிகளை 1988ம் ஆண்டு முஸ்லீம் சமுகத்தை நோக்கி திருப்பியதனால் புலிகள் இயக்கத்தில் இருந்த முஸ்லீம் பிள்ளைகள் அவர்களை விட்டு வெளியேறி இரண்டு சமுகமும் அடித்துக் கொள்ளக்கூடிய நிலமை ஏற்பட்டது.

சமூகங்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டதால் பாரியளவிலான உயிர் இழப்புக்களும் சொத்து சேதங்களும் ஏற்பட்டன, ஆனால் இந்த ஆட்சி மாற்றத்தினால் எல்லா பிரச்சினைகளும் மறக்கடிக்கப்பட்டு ஒற்றுமை உருவாக்கப்பட்டிருக்கின்றது, அந்த ஒற்றுமை இந்த நாட்டில் நிலை நிற்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் ஐந்து பயனாளிகளுக்கும் ஓட்டமாவடி பிரசே செயலக பிரிவில் ஐந்து பயனாளிகளுக்குமாக பத்து பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

சமுக சேவை உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.அலியார் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச செயலக பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், ஓட்டமாவடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ்.சில்மியா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

1f946e37-d198-450a-be92-ddd13ca348ac ad80869a-4d71-4d22-bea0-2553b5c6a6c8 c8865007-418e-42fe-9a02-a2eed2082666 e40d0cb4-d8f9-49cd-8399-71997d298652

LEAVE A REPLY