அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் – வடமாகாண முஸ்ஸிம் பிரஜைகள் குழுவினர் சந்திப்பு

0
204

அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட குழுவினருக்கும், வடமாகாண முஸ்ஸிம் பிரஜைகள் குழுவினருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு அடம்பன் பள்ளிவாசல் பிட்டியில் அமைந்துள்ள முஸ்ஸிம் பிரஜைகள் குழு அலுவலகத்தில் நடைபெற்றது.

மன்னாரிற்கு கடந்த வெள்ளிக்கிழமை விஜயத்தை மேற்கொண்டிருந்த அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட குழுவினர் அடம்பன் பள்ளிவாசல் பிட்டியில் அமைந்துள்ள முஸ்ஸிம் பிரஜைகள் குழு அலுவலகத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

வடமாகாண முஸ்ஸிம் பிரஜைகள் குழுவின் தலைவர் அஸ்ரப் முபாரக் ரசாபீ மௌலவி உட்பட பிரஜைகள் குழுவின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது வடமாகாண முஸ்ஸிம்களின் மீள் குடியேற்றம், சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையினை கட்டியெழுப்புதல், இனப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுகின்ற போது வடமாகாண முஸ்ஸிம்களுக்கு உரிய இடம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் குறித்து ஆரயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY